
க்ஷேத்திர மஹிமை : மஹா விஷ்ணுவிற்க்கு மஹாலக்ஷ்மிக்கும் திருமணம் நடந்த திருத்தலம்.
மஙகளாசானம் : திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
திவ்ய தேசம் : 16வது திவ்ய தேசம்
ரோஹிணி நட்சத்திர திருக்கோயில்
கிருஷ்ணமங்கள க்ஷேத்திரம்
விமானம் : உத்பலாவதக விமானம்
மண்டபம் : வேதமண்டபம் (ஸ்ரீமண்டபம்)
புஷ்கரணி :தர்சன புஷ்கரணி
ஸ்தல வ்ருக்ஷம் : மகிழ மரம்
ப்ரத்யக்ஷம்: வருணன் ரோமேச மஹரிஷி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு
திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரம் மங்களாசாசனம்
மூலவர் திருநாமம் : பெரும்புறக்கடல்
ஸ்ரீதேவி பூமிதேவியுடன் நின்ற திருக்கோளத்தில் மிகவும் ப்ரம்மாண்டமாக
சேவை சாதிக்கிறார்
உத்ஸவர் : பக்தவத்சலன்
தாயார் : மூலநாச்சியார் : கிருஷ்ணமங்கள நாயகி
உத்ஸவ நாச்சியார் அபிஷேக வல்லி தாயார்

புராண வரலாறு
முன்பு பாற்கடல் கடைந்தபோது மஹாலட்சுமி அவதாரம் செய்தாள். அவளுடன் பிறந்த யானை, குதிரை, பாரிஜாதம் பகவான் தேவர்களுக்குத் தந்தார். மஹாலட்சுமியின் தோற்றத்தைத் கண்டு ஆசைப்பட்டும் நாணத்தால் மறைந்தார்.
லட்சுமியும் மறைந்தாள். ஆனால் லட்சுமிக்கு திருமாலை அடைய வேண்டும் என்று ஆசை, திருமாலை குறித்து தவம் செய்ய உறுதி கொண்டாள். தவத்திற்கு உற்ற தாலமாக திருகண்ணமங்கையைக் கண்டு, தர்சன புஷ்கரணிக் கரையை அடைந்து தவமிருந்தாள். தோழிகள் கொடுத்த ஜலத்தையும் அருந்தாமல் வேண்டாம் என்று நிராகரித்தாள். அதனால் அவளுக்கு “மா” என்ற பெயர் ஏற்பட்டது.
எப்போழுதும் நாராயணனையே மனத்தால் நினைத்தாள். அதனால் “ஶ்ரீ” என்ற பெயர் வந்தது. தீவிரமான தவத்தினால் பகவானை ரமிக்கச் செய்தாள். அதனால் “ரமா” என்ற பெயர் வந்தது. மஹா லட்சுமியின் தவத்தை மெச்சிய திருமால் “உத்பலாவதகம்” என்ற விமானத்தில் ஏறி, தர்சன புஷ்கரணிக் கரைக்கு வந்தார். கரையில் மேல் திசையில் நின்று கொண்டு, கீழ் திசையில் தவம் செய்த லட்சுமியை கண்டார். விஷ்வக்ஸேனரிடம் ஓலை எழுதியனுப்பினார். அவ்வோலயை பிரட்டி வாசிக்க சொன்னார். “நான் மேற்கு கரையில் நின்று கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருந்தது. திருமாலின் இங்கிதத்தை கொண்டாடினாள் மகாலட்சுமி.
பின்பு தோழிகளோடு பெருமாளிடம் வந்து சேர்ந்தாள். விஷ்வக்ஸேனர் நியமனத்தோடு உள்ளே சென்றாள். மாஹலட்சுமி பெருமாளை சேவித்து தோத்திரம் செய்தாள். ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர் ஆகிய அனைவரும் கூடினார்கள். விதிப்படி திருமண வைபவம்
நடந்தேறியது உடனே தேவர்கள் ஒன்றுகூடி பகவானுடைய பட்ட மஹிஷியாக மஹாலக்ஷ்மியை தர்சன புஷ்கரணி தீர்த்தங்களால் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
தேவர்கள் அனைவரும் எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டெ இருக்க வேண்டும் என நினைத்தார்கள் எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாள் தாயார்
தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள் இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில்
தென்புறத்தி தேன்கூடு உள்ளது இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது இந்த தேனீக்கள் பக்தர்களை
ஒன்றும் செய்வதில்லை. இதை தரிசனம் செய்வது மிகவும் புண்ணியம் ஆகும்
இந்த பெருமாளை க்ருதயுகத்தில் ப்ரம்மாவும் த்ரேதாயுகத்தில் புரூரவஸ்ஸும்
த்வாபரயுகத்தில் ப்ருகுமஹரிஷியும் கலியுகத்தில் ஆகாசபுருஷனும்
பூஜிக்கிறார்கள் மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. திருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வேலை வேண்டுபவர்கள் கோர்ட் சம்மந்தமான பிரச்சனை விலக வேண்டுபவர்கள் (நேர்த்திக்கடன்) இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வது வஸ்திரம் சாற்றுவது மாலை சாற்றுவது விஷ்ணு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்வது இங்கு உள்ள நேற்த்தி கடனாகும்.
ப்ரார்த்தனா மூர்த்தி : கருடாழ்வார் நின்ற திருக்கோளத்தில் ப்ரம்மாண்டமாக
சேவை சாதிக்கிறார்
ராகு தோஷம்கேது தோஷம், பக்ஷி தோஷம் சர்ப்ப தோஷம் விலக
வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள்
கருடாழ்வார்க்கு கருப்பு நிறம் இல்லாத ஒன்பது கஜம் கட்டம்
போட்ட புடவை சாற்றி அர்ச்சனை செய்து 12 முறை வலம் வந்து
ப்ரதக்ஷிணம் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
முக்கிய திருவிழாக்கள்
சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்
ப்ரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் அன்று ஸ்ரீ ஆண்டாளுடன் ஸ்ரீ பக்தவத்சலப்பெருமாள் அம்மையப்பன் என்கின்ற ஊருக்கு எழுந்தருளி வீதி உலா காண்பார் ப்ரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள் அன்று ஸ்ரீ ஆண்டாளுடன் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் அம்மையப்பன் ஊருக்கு எழுந்தருளி வீதி உலா காண்பார் பின்னர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் ஓடம்போக்கி ஆறில் ஸ்ரீஆண்டாளுடைய மூக்குத்தியை தேடி கொடுக்கும் வைபவமானது நடைபெறும் இது திருத்தலத்தின் மிகச் சிறந்த திருவிழா ஆகும்
அக்ஷய த்ருதீயை அன்று காலை பெருமாள் தாயார் திருமஞ்சனம் நடைபெறும் இரவு தங்க கருட சேவை நடைபெறும் இங்குள்ள மூலவர் பெரும் புறக்கடல் இந்த பெருமாளுக்கு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கக்கூடிய திருமஞ்சனம் (ஜேஷ்டா அபிஷேகம் ) பெரிய திருமஞ்சனம் ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று நடைபெறுகிறது. அன்று இரவு தங்க கருட சேவை நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம் : ஸ்ரீ அபிஷேக வெள்ளி தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது காலையில் திருமஞ்சனம் இரவு புறப்பாடு நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.
பௌர்ணமிக்கு இரண்டு நாள் முன் தொடங்கி பௌர்ணமி அன்று காலை தங்க கருட சேவை நடைபெறும் சக்ரத்தாழ்வார் தர்சன புஷ்கரணியில் பவித்ரோத்சவ தீர்த்தவாரி நடைபெறுகிறது.
மாசி மாதம்: மாசிமகம் பெளர்ணமியன்று காலை கருட ஸேவை நடைபெறும். ஸ்ரீசக்ரத்தாழ்வார் தர்சன புஷ்கரணில் தீர்த்தவாரி நடைபெறும்.
பங்குனி மாதம்: பங்குனி உத்திரம் அன்று பெருமாள் தாயார் கல்யாண உற்சவம் நடைபெறும்.
ரோஹிணி நட்சத்திர திருக்கோயில் ரோஹிணி நட்சத்திரத்தின் அன்று
இந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதால் ஜாதக ரீதியாக உள்ள ப்ரச்சனைகள் விலகும்.
ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட மிகவும் உகந்த திருத்தலம் ஆகும்.
அடியேன் கீழ்கண்ட பட்டாச்சாரி மூலம் விவரங்களை சேகரித்து அளித்துள்ளேன். மேலும் விவரங்களுக்கு அர்ச்சகரை அணுகவும்.
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8.00 மணி to 12.00 மணி வரை
மாலை 5.00 மணி to 8.30 மணி வரை
தொடர்புக்கு
ஆலய அர்ச்சகர்
V.சுதர்சனன் பட்டாச்சாரியார் திருக்கண்ணமங்கை
📞 8489145022
அடியேன்
அரங்கநாதன்
